பச்சையம்மன் கோவிலுக்கு செல்ல அனுமதி: சென்னை ஐகோர்ட் இடைக்கால உத்தரவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2014 12:07
செஞ்சி: செஞ்சி பச்சையம்மன் கோவிலுக்கு முதியோர்களும், குழந்தைகளும் வாகனங்களில் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என ஐகோர்டில் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளனர். செஞ்சி அருகே மேலச்சேரியில் அடர்ந்த காட்டின் நடுவே உள்ள பச்சையம்மன் கோவிலுக்கு பல நூறு ஆண்டுகளாக ஆடி மாதத்தில் பக்தர்கள் சென்று வந்தனர். கடந்த ஆண்டு திடீரென வனத் துறையினர் வாகனங்கள் செல்வதை தடுத்து நிறுத்தினர். கடந்த வாரம் ஆடி வெள்ளியன்று வாகனங்கள் செல்வதை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்க கூடாது என கோவில் நிர்வாகி ரவிச்சந்திரன், வழக்கறிஞர் தாமரைச் செல்வன் மூலம் சென்னை ஐகோர்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி ராஜேந்திரன் அடுத்த மாதம் 15ம் தேதி வரை ஆடி வெள்ளிக் கிழமைகளில் பொருட்களை எடுத்து செல்லவும், வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் வானகங்களில் செல்வதற்கு வனப்பகுதி வழிகளை அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.