பதிவு செய்த நாள்
24
ஜூலை
2014
12:07
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையில், 4,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத் தலைவர் ராஜமுகமது, செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில், இந்த ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வு குறித்து ராஜமுகமது கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையில் உள்ள பாறைகளில், பெருங்கற்காலம் அல்லது இரும்பு கற்கால பண்பாட்டு தடயங்கள், 200க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் நிறைய காணப்படுகிறது. குடுமியான்மலை குன்றுகளில், 20க்கும் மேற்பட்ட ஓவியங்களையும் காணப்படுகிறது. இந்த ஓவியங்கள் அனைத்தும் சிவப்பு, மஞ்சள், கறுப்பு வண்ணத்தில் தீட்டப்பட்டுள்ளது. இயற்கையாக கிடைத்த வண்ணத்தை கொண்டு வரையப்பட்ட, இந்த ஓவியங்கள், பாறைகளில் தெளிவாக பதிந்துள்ளது. இயற்கை சீற்றங்களுக்கு தாக்குப்பிடித்துள்ள, இந்த ஓவியங்கள், 4,000 ஆண்டுகள் பழமையானது. திருமயம், சித்தனவாசல் போன்ற இடங்களிலும், பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.