பதிவு செய்த நாள்
24
ஜூலை
2014
12:07
திருச்சி: திருவானைக்காவல் கோவிலில், ஆடிப்பூர தெப்ப உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரசித்தி பெற்ற திருச்சி, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி கோவிலில், ஆடிப்பூர தெப்ப உற்சவ விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும், 31ம் தேதி வரை, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில், ஸ்வாமி திருவீதி உலா நடக்கிறது. ஆகஸ்ட், 1ம் தேதி இரவு, 7 மணிக்கு தெப்பத்தில் ஸ்வாமி அம்மாள், ஏக சிம்மாசனத்திலும், பஞ்சமூர்த்தி தெப்பத்திலும் எழுந்தருள உள்ளனர். தெப்ப உற்சவத்தையொட்டி, கோவில் வளாகத்தில் உள்ள தெப்பத்தில், தண்ணீர் நிரப்பும் பணி நடந்து வருகிறது.