பொள்ளாச்சி :பொள்ளாச்சி பி.கே.எஸ்., காலனி குறிஞ்சி நகர் போயர் சங்கம் சார்பாக ஆடிவெள்ளியை முன்னிட்டு தீர்த்தக்காவடி எடுக்கப்பட்டது. 10வது ஆண்டாக இந்திகழ்ச்சி நடப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதிகாலை 4.00 மணிக்கு சேத்துமடை காளியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, மதியம் 12.00 மணிக்கு பொள்ளாச்சி மாகாளியம்மனுக்கு அபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு 16 வகை அபிேஷகங்கள் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. மேலும், மதியம் 1.00 மணியிலிருந்து அன்னதானமும் செய்யப்பட்டது. இத்தகவலை கோவில் முன்னாள் அறங்காவலர் மணியன் தெரிவித்தார்.