கள்ளக்குறிச்சி: நீலமங்கலத்தில் துர்கை அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று காலை 6:00 மணிக்கு பஞ்ச மூர்த்தி தெ#வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து வினாயகர் வழிபாடு, புன்னியாவதஜனம், கும்ப கலசத்தில் துர்கை அம்மனை ஆவாஹனம் செ#து பூஜைகள் செ#தனர்.பின்னர், 108 பால்குடங்கள் வைத்து, பெண் பக்தர்கள் வழிபட்டனர். துர்கை அம்மனுக்கு 16 வகையான அபிஷேகங்கள் செ#தபின் 108 பால்குட அபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செ#து, லலிதா சகஸ்ரநாம மந்திரங்களை வாசித்து அர்ச்சனை செ#தனர்.