கீழக்கரை : கீழக்கரை அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோயிலில் காப்புகட்டுதலுடன் விழா துவங்கியது. முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு கோலாட்டம், ஒயிலாட்டம், கும்மியடித்தல் நடந்தது. நேற்று மாலையில் அக்னிச்சட்டி, அலகு குத்தி ஏராளமானோர் ஊர்வலமாக, 21 குச்சி கடற்கரையில் முளைப்பாரிகளை கரைத்தனர்.