விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி புவனேஸ்வரர் கோவில் அம்மனுக்கு சந்தன காப்பு உற்சவம் நடந்தது.ஆடி மூன்றாம் வெள்ளி பஞ்சமி திதியை முன்னிட்டு புவனேஸ்வரர் கோவிலில் லிங்கம் மற்றும் புவனேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பின்னர் புவனேஸ்வரி அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.பூஜைகளை ரவிகுருக்கள் தலைமையில் வேதாத்திரி குருக்கள் செய்தனர் . விழா ஏற்பாடுகளை நகரத்தார் கோவிந்தன் செட்டியார் தலைமையில் தர்மகர்த்தா சுப்புராயலு, குமாரசாமி ஆகியோர் செய்திருந்தனர் .