கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் சுந்தரர் குருபூஜை விழா நடந்தது. கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனாரின் குரு பூஜை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு மூலவர் ராமநாதீஸ்வர் மற்றும் ஞானாம்பிகை அம்மனுக்கும், சுந்தரமூர்த்தி அடிகளாரின் சிலைக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.பின்னர், தமிழ் வேதவார வழிபாட்டுச் சபையில் நடந்த முற்றோதல் நிகழ்ச்சியில், சுந்தரர் பாடிய 7ம் திருமுறையிலிருந்து தேவாரப் பாடல்களை முற்றோதல் குழு வினர் பாடினர். இதில் தமிழ் வேத வார வழிபாட்டுச் சபையின் தலைவர் பழனியாண்டி, செயலாளர் சிவாலிங்கம், ஓதுவார்கள் சன்னியாசி, ஆறுமுகம், திருஞானசம்பந்தம், பார்த்திபன் பங்கேற்றனர்.