பதிவு செய்த நாள்
04
ஆக
2014
01:08
நகரி : சிந்தலபட்டடை, திரவுபதியம்மன் கோவிலில், நேற்று, அக்னி வசந்த உற்சவம் நடந்தது. 2,000 பக்தர்கள், காப்பு கட்டி தீ மிதித்தனர்.நகரி அடுத்த, சிந்தலபட்டடை திரவுபதியம்மன் கோவிலில், கடந்த மாதம், 25ம் தேதி, பாரத கொடியேற்றத்துடன், அக்னி வசந்த உற்சவம் துவங்கியது. தினசரி காலை, மாலையில் அம்மனுக்கு நீராட்டு வைபவம் நடந்தது. பகலில் மகாபாரத சொற்பொழிவும், இரவு தெருக்கூத்தும் நடத்தப்பட்டன.நேற்று முன்தினம் இரவு, கிருஷ்ணருக்கு உற்சவம் நடந்தது. கண்ண பிரான், வாண வேடிக்கையுடன் வீதியுலா எழுந்தருளினார்.நேற்று காலை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை 6:00 மணியளவில், தீ மிதி திருவிழாவும் நடந்தன. இதில், நகரி, சிந்தலபட்டடை, ஏகாம்பரகுப்பம், சத்திரவாடா, புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை தரிசனம் செய்தனர்.