புதுச்சேரி : பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ஜநேயருக்கு சிறப்பு பால் அபிஷேகம் நேற்று நடந்தது. திண்டிவனம்-புதுச்சேரி நெடுஞ்சாலை பஞ்சவடீயில் ௩௬ அடி உயர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்ஜநேயர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை, ஆஞ்ஜநேயருக்கு சிறப்பு பால் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.அதையொட்டி, நேற்று மாலை பஞ்சமுக ஆஞ்ஜநேயர் சுவாமிக்கு பால், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் திருமஞ்சனம் நடந்தது.அபிஷேக ஏற்பாடுகளை பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், செயலாளர் நரசிம்மன், நிர்வாக அதிகாரி சுந்தரவரதன் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.