பாகூர்: ஆடி சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், சுந்தரமூர்த்தி நாயன்மாருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பாகூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. ஆடி சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று மாலை 5.30 மணிக்கு, 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, ஆடிப் பெருக்கை முன்னிட்டு, வேதாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பூ பந்தல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பாகூர் வேதா பெண் கள் நற்பணி மன்றம் சார்பில் நடந்த சுமங்கலி பூஜையில் அமைச்சர் தியாகராஜன் பங் கேற்று, சுமங்கலி பெண்களுக்கு பிரசாதம் வழங்கினார்.