சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரம் மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. தியாகராஜபுரம் மாரியம்மன் கோவிலில் மழை ÷ வண்டி ஊரணி பொங்கல் வைத்து சாகை வார்த்தல் திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு அம் மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் பக்தர்கள் கஞ்சிகளையத்தை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு வந்தனர். கோவிலுக்கு முன்பாக இருந்த கொப்பறையில் பக்தர்கள் சாகை வார்த்தனர். அம்மனுக்கு மகாதீபாராதனை நடந்த பின், பக்தர்களுக்கு (கூழ்) பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரி திருப்பதி மற்றும் ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.