திருப்பதி : திருமலையில், ஆண்டுதோறும், 450 உற்சவங்கள் கொண்டாடப்படுகின்றன. அதில், பவித்ரோற்சவம் முக்கியமானது. கோவில் தினசரி பூஜைகளில், ஏதேனும் குறை இருந்தாலும், கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்களை அறியாமல் செய்த தவறுகள், அவற்றால் ஏற்பட்ட தோஷங்களை களைய, ஆண்டுதோறும், ஆடி மாதம், பவித்ரோற்சவம் வைகானச ஆகம விதிப்படி கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்கள் கொண்டாடப்படும், பவித்ரோற்சவத்தின் முதல் நாளான நேற்று காலை, மலையப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது.