மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் தேவி மாரியம்மன் கோவிலில் ஆடி பிரமோற்சவ விழாவில், ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் அருள்பா லித்தார். கடந்த 1ம் தேதி ஆடி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமுரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, அலங்கரித்த அம்மன் வீதியுலா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். வரும் 9ம் தேதி மாலை 4:00 மணியளவில் மீனாட்சி திருக்கல்யாணம், 10ம் தேதி 12:00 மணியளவில் 108 பால்குடம் ஊர்வலம் மற்றும் செடல் உற்சவம் நடக்கிறது.