மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், திருவேடகம் விவேகானந்த குருகுல கல்லுாரியின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சார்பில் உழவாரப்பணி நடந்தது. கல்லுாரி செயலர் சுவாமி நியமானந்த மகராஜ், இப்பணியில் ஈடுபட்ட மாணவர்களுக்கு 64 நாயன்மார்களின் சிவதொண்டுகள் குறித்து பேசினார்.கோயில் பசுமடங்கள், கழிவுநீர் வாய்க்கால்கள் சுத்தம் செய்யப்பட்டன. கோபுரத்தின் மேற்பகுதியில் உள்ள செடிகள், குப்பை அகற்றப்பட்டன. முதல்வர் ராமமூர்த்தி, பேராசிரியர்கள் சந்திரசேகரன், பாரதிராஜா, ராஜா மற்றும் பலர் பங்கேற்றனர்.