விழுப்புரம்: விழுப்புரம் வழுதரெட்டி பாண்டியன் நகரில் உள்ள ராஜகணபதி கோவிலில் விளக்கு பூஜை நடந்தது. விழாவையொட்டி நடந்த சிறப்பு பூஜைகளை கல்யாணராமன் அய்யர் துவக்கி வைத்தார். அப்பகுதி பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்தனர். நிர்வாகிகள் ராஜாபிள்ளை, செல்வராஜ், சீனுவாசன், கருணாகரன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.