சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவ ஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலும் ஒன்று. இந்த கோயிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 30ம் தேதி காலை 4.30 மணி துவங்கி 5 மணிக்கு கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலையும், இரவும் அம்பாள் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. விழாவையொட்டி கோமதிஅம்பாள் தேரோட்டம் விமரிசையாக நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.