திண்டுக்கல்: கோட்டை குளத்தை தோண்டத்தோண்ட சுவாமி சிலைகள் கிடைத்து வருவது பக்தர்கள் மத்தியில் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் இருந்த இயற்கையான பள்ளம் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு குளமாக திப்பு சுல்தான் காலத்தில் மாற்றப் பட்டிருந்தது. அதன் பின்னர் பராமரிப்பு இல்லாததால் சேறும், சகதியும் நிறைந்து குளம் இருந்ததற்கான அடையாளம் மட்டுமே தெரிந்தது. தற்போது மாநகராட்சி சார்பில் துõர்வாரும் பணி தொடர்ந்து நடக்கிறது. முதல் 10 அடி தோண்டியபோது, சுரங்கபாதைக்கான அமைப்பு தென்பட்டது. அடுத்த நாள், பித்தளையால் செய்யப்பட்ட திரிசூலம், நந்தி சிலை கிடைத்தது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் விநாயகர் சிலை மற்றும் முருகன், மதுரை வீரன் சிலைகள் கிடைத்தன. தற்போது சிவலிங்கமும், காளை சிலையும் கிடைத்துள்ளது. நுõற்றாண்டுகளுக்கு முந்தைய சிலைகளாக இருந் தாலும் நுணுக்கமான வேலைபாடுகளுடன், எந்த சேதமும் இல்லாமல் அனைத்து சிலைகளும் காணப்பட்டன. குளத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.