புதுச்சேரி: தட்சணாமூர்த்தி நகர் புத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழாவை, முதல்வர் ரங்கசாமி இன்று தொடங்கி வைக்கிறார். புதுச்சேரி தட்சணாமூர்த்தி நகரில் உள்ள புத்து மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடந்து வரு கிறது. நேற்று மாலை மகா அபிஷேகம், கலசாபிஷேகம் நடந்தது. இன்று (௮ம்தேதி) சாகை வார்த்தல் விழா நடக்கிறது. பாப்ஸ்கோ சேர்மன் தமிழ்ச்செல்வன், புதுச்சேரி இன்ஜினியரிங் கல்லுாரி சேர்மன் ஜெயபால், முன்னாள் கவுன்சிலர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். முதல்வர் ரங்கசாமி, மதியம் 12.00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார். நாளை மாலை ௬.௦௦ மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, ஊஞ்சல் உற்சவம், காப்பு களைதல் நடக்கிறது.