வேலூர்: காட்பாடி அருகே, அனுமதி பெறாத இடத்தில் செயல்பட்ட கிறிஸ்துவ வழிபாட்டு தலத்தை அதிகாரிகள் அகற்றினர். காட்பாடி அடுத்த அன்னங்குடி கிராமத்தில், தற்காலிக கூரை அமைத்து அரசின் அனுமதி பெறாமல், புறம்போக்கு இடத்தில் கிறிஸ்துவ வழிபாட்டு தலம் ஒன்று இயங்கி வந்தது. இதை, லத்தேரியை சேர்ந்த கிறிஸ்தவ போதகர் ஜேக்கப் ரோக் நடத்தி வந்தார். அரசின் அனுமதி பெறாமல், இயங்கி வந்த வழிபாட்டு தலத்தை அகற்ற கலெக்டர் நந்தகோபால் உத்தரவிட்டார். இதையடுத்து வழிபாட்டு தலத்தின் கூரை நேற்று, அகற்றப்பட்டது. வேலூர் சப்கலெக்டர் பட்டாபிராமன் பார்வையிட்டார்.