பதிவு செய்த நாள்
09
ஆக
2014
12:08
பழநி: வரலட்சுமி விரதம் மற்றும் ஆடிவெள்ளியை முன்னிட்டு, பழநி பெரியநாயகியம்மன், மாரியம்மன்கோயில் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, பழநி திருஆவினன்குடி கோயிலில் துர்க்கையம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சுமங்கலி பெண்கள், பக்தர்களுக்கு வளையல், வாழைப்பழம், தாலிக்கயிறு, மஞ்சள்கிழங்கு உள்ளிட்டவைகளை பிரசாதமாக வழங்கி நேர்த்திகடன் செலுத்தினர். இதைப்போலவே, பெரியநாயகியம்மன் கோயிலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, நூறாயிரம் மலர்கள் தூவி, லட்சார்ச்சனை நடந்தது. மாரியம்மன் கோயிலில் காலை, மாலையில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. லட்சுமிபுரம் மகாலட்சுமி கோயிலில் அம்மன் சந்தன அலங்காரத்தில் அருள்பாலித்தார். புதுதாராபுரம்ரோடு ரெணகாளியம்மன், புதுநகர் ரயில்வேகேட் முத்துமாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.கன்னிவாடி: வரலட்சுமி நோன்பை முன்னிட்டு தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. அம்மனுக்கு,பால், சந்தனம், பன்னீர், மஞ்சள் நீர் அபிஷேகம் நடந்தது. வாலை, சக்தி அம்மனுக்கு விசேஷ மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆஞ்சநேயர், போகர், ராஜகன்னி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு, விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.
* கொத்தப்புள்ளி கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில், கமலவள்ளி, ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஒட்டன்சத்திரம்: ஆடி வெள்ளி, வரலட்சுமி நோன்பை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. அம்மனுக்கு மலர் அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தது. இங்குள்ள துர்க்கை அம்மனை சுமங்கலி பெண்கள் தீபமேற்றி வழிபட்டனர். * திண்டுக்கல் என்.எஸ். நகர் ஹரிஓம் சிவசக்தி விநாயகர் கோயிலில் ஆடி வெள்ளி, வரலட்சுமி நோன்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திண்டுக்கல் வாசவி மஹாலில் நடந்த வரலட்சுமி நோன்பு பூஜையை முன்னிட்டு கன்னிகா பரமேஸ்வரி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏாளமான பெண்கள் கலந்து கொண்டு தாலி மாற்றிக் கொண்டனர்.
தொடர்புடைய கோயில்கள் :