பதிவு செய்த நாள்
09
ஆக
2014
12:08
விருத்தாசலம்: விருத்தாசலம் செல்லமுத்து மாரியம்மன் கோவில் ஆடி செடல் திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. விருத்தாசலம் பெரியார் நகர் டிரைவர் குடியிருப்பு ஆதிசக்தி விநாயகர், செல்லமுத்து மாரியம்மன் கோவில் ஆடி செடல் திருவிழா, நேற்று (8ம் தேதி) துவங்கி, வரும் 17ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி, நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கணபதி ஹோமம், விநாயகர், செல்லமுத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மணிமுக்தாற்றிலிருந்து சக்தி கரகம் அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் வேள்வி பூஜை யும், பகல் 12:00 மணிக்கு மேல் கொடியேற்றம் நடந்தது. இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார். வரும் 15ம் தேதி மணிமுக்தாற்றி லிருந்து பால்குடம், தீச்சட்டி சுமந்து, செடல் உற்சவம் நடக்கிறது. 16ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, மாலை ஊஞ்சல் உற்சவம், 17ம் தேதி கஞ்சி வார்த்தல், இரவு கும்பம் கொட்டுதல், தீபாராதனை நடக்கிறது.
தொடர்புடைய கோயில்கள் :