பதிவு செய்த நாள்
09
ஆக
2014
01:08
சிவகாசி: சிவகாசியில் அனைத்து தொழில்களும் பாதிப்பு இன்றி மென்மேலும் வளரவும், விபத்து, இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்கவும், மழை பெய்யவும், உலக நன்மை, அமைதியை முன்னிட்டு, சிவகாசி இந்து நாடார் உறவின்முறைக்கு சொந்தமான பத்திரகாளியம்மன் கோயிலில் மஹா சதசண்டியாக கலச அபிஷேகம் நேற்று துவங்கியது. காலை கணபதி ஹோமத்துடன் யாக பூஜைகள் துவங்கியது. மாலையில் சதசண்டி யாகத்திற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட பிரமாண்ட யாக சாலையில் பூஜைகள் துவங்கியது. இந்த யாகத்திற்காக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் உள்ள 108 மூலிகை மரங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மூலிகைகள் வார்க்கப்படுகிறது. பக்தர்கள் வழங்கும் பழங்கள், பட்டு வஸ்திரங்கள், நெய் யாகத்தில் வார்க்கப்படுகிறது. அம்பாளுக்கு ஒரு லட்சம் மூல மந்திர ஜெபம் நடத்தப்படுகிறது. முதல்கால யாக பூஜை லலிதா சஹஸ்ர ஹோமம், இரண்டாம் கால பூஜையாக லலிதாதிரிசதி ஹோமம், மூன்றாம் கால பூஜையாக நவச்சாரி ஹோமம் நடத்தப்படுகிறது. பின்னர் மஹாசண்டிவேதிகார்ச்சனைகள் நடந்தது. தூத்துக்குடி செல்வம் பட்டர் தலைமையில் பட்டர்கள் யாக வேள்விகளில் பங்கேற்று வருகின்றனர். ஏற்பாடுகளை, சிவகாசி இந்து நாடார் உறவின்முறை மகமை பண்டு தலைவர் டென்சிங், தேவஸ்தான கமிட்டி தலைவர் ராமர் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 10ம்தேதி வரை யாக பூஜைகள் நடைபெறுகிறது.
தொடர்புடைய கோயில்கள் :