வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் திருக்கல்யாணம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஆக 2014 04:08
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. கடந்த ஆக., 2 ல் கொடியே ற்றத்துடன் துவங்கிய திருவிழாவில், நாள் தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. தேரோட்டம் நாளை(ஆக.10)மாலை 3 மணியளவில் நடக்கிறது. முன்னதாக மதுரை அழகர்மலை தீர்த்தத்தால் சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. ஊர் பிரமுகர்கள் அழைப்பை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சவுந்தரராஜப்பெருமாள் தேரில் எழுந்தருளுவார். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, தேரோட்டம் ரத வீதிகள் வழியே நகரை வலம் வரும்.