பதிவு செய்த நாள்
11
ஆக
2014
11:08
ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுாரில், தான்தோன்றி அம்மன் கோவிலில், ஆடி மாத தீ மிதி திருவிழாவினை முன்னிட்டு, மூன்றாம் நாள் உற்சவமான நேற்று, காலை பால் அபிஷேகம் நடந்தது.ஸ்ரீபெரும்புதுாரில், பழமையான தான்தோன்றி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஆடி மாதம் தீ மிதி திருவிழா சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம்.அதன்படி, கடந்த 8ம் தேதி, மாலையில், கணபதி ஹோமத்துடன், கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும், கோவிலில் பகல், 12:00 மணிக்கு மேல், மகா அபிஷேகமும், மாலையில், வேப்பிலை கரகம், வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும். இந்நிலையில், நேற்று, வீராசாமிபிள்ளை தெரு பகுதிவாசிகள் சார்பாக, அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. ஏராளமான பெண்கள், பால் குடங்களுடன், கோவிலுக்கு வந்திருந்து, அம்மனை வழிபட்டனர். வரும், 17ம் தேதி, மாலை தீ மிதி திருவிழா நடைபெற உள்ளது.
தொடர்புடைய கோயில்கள் :