பதிவு செய்த நாள்
11
ஆக
2014
11:08
தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடந்தது. ஆகஸ்டு 2 ல் கொடி÷ யற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் காலை, மாலையில் கேடயம் மற்றும் வாகனங்களில் புறப்பாடு நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஆக., 8 ல் நடந்தது. நேற்று காலை தேர் அருகே உள்ள மேடையில் சுவாமி மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அரு ள்பாலித்தார். மாலையில் நாராயண நாம பஜனைகள் நடந்தது. தொடர்ந்து தேரோட்டம் துவங்கியது. அமைச்சர் விசுவநாதன் தேரோட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். உதயகுமார் எம்.பி., முன்னாள் எம்.பி., சீனிவசன், பழனிச்சாமி எம்.எல்.ஏ., மேயர் மருதராஜ், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஜெயசீலன், நகர செயலாளர் பாரதிமுருகன், அகரம் பேரூராட்சி தலைவர் தமிழரசி, துணைத்தலைவர் சக்திவேல், தாடிக்கொம்பு பேரூராட்சி தலைவர் அன்புச்செல்வி, துணைத்தலைவர் சுப்பிரமணி, கவுன்சிலர்கள், மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முக்கிய வீதிகள் வழியாக கோவிந்தா கோசம் முழங்க தேரோட்டம் நடந்தது. நான்கு ரதவீதிகள் வழியாக தேர் சுற்றி வந்து நிலையை அடைந்தது. இதன்பின் தேர்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடு களை கோயில் செயல் அலுவலர் வேலுச்சாமி, தக்கார் ரமேஷ் செய்திருந்தனர்.
தொடர்புடைய கோயில்கள் :