Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தான்தோன்றி அம்மன் கோவில் ஆடி ... ஊட்டியில் ஆடிப்பூர ஊர்வலம்: செவ்வாடை பக்தர்கள் பரவசம்! ஊட்டியில் ஆடிப்பூர ஊர்வலம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாப விமோசனம் தந்த அனந்தசரஸ் குளத்தின் அவலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 ஆக
2014
12:08

ஸ்ரீபெரும்புதுார் : பூதகணங்களுக்கு சாப விமோசனம் தந்ததாக கருதப்படும், ஸ்ரீபெரும்புதுார் அனந்தசரஸ் குளம், போதிய பராமரிப்பு இல்லாமல், சீரழிந்து வருகிறது. ஸ்ரீபெரும்புதுாரில், பழமையான ஆதிசேகவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு அருகில், அனந்தசரஸ் என்று அழைக்கப்படும் குளத்தில், பக்தர்கள் புனித நீராடி, கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.இக்குளம், பாம்புகளால் நிர்மாணிக்கப்பட்டதாகவும், பூதகணங்கள் இக்குளத்தில் நீராடி, சாப விமோசனம் பெற்றதாகவும் ஐதீகம்.ஸ்ரீபெரும்புதுார் ஏரியில் இருந்து, சிங்கமுக கால்வாய் வழியாக, தண்ணீர் வரும் வகையில், கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. இக்குளம், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், துார்வாரப்பட்டது. சிங்கமுக கால்வாய், கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது. குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து, சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், குளத்திற்குள் கழிவுநீர் எளிதாக கலக்கிறது. குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குளத்தில் கலப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.குளத்திற்கு, சுற்றுச்சுவர் அமைத்தும், ஸ்ரீபெரும்புதுார் ஏரியிலிருந்து, பைப் மூலம், தண்ணீர் கொண்டு வரவும், குளத்தை துார்வாரி சுத்தப்படுத்தவும், இந்து சமய அறநிலையத் துறை, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar