மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் தேவி மாரியம்மன், திருக்கல்யாண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மந்தாரக்குப்பம் தேவி மாரியம்மன் கோவில் ஆடி பிரம்மோற்சவ விழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, இரவு அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதியுலா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவத்தையொட்டி, அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.