கீழக்கரை :ராமநாதபுரம், ஏர்வாடி சுல்தான் செய்யது இப்ராகீம் சாகிபு தர்காவில் 840ம் ஆண்டு சந்தனக்கூடு விழா ஆக., 27 மாலை 6:30 மணிக்கு துவங்க உள்ளது.செப்., 5 மாலையில் அடிமரம் நடுதல், செப்.,6 மாலை 5:30 மணிக்கு கொடிஏற்றம். செப்., 18 மாலை 4 மணிக்கு சந்தனக்கூடு ஊர்வலம் துவங்கும். மறுநாள், சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்கும். செப்., 25 மாலை தர்கா வளாகத்தில் கொடி இறக்கம் செய்யப்பட்டு அன்னதானம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை தலைவர் அம்ஜத் உசேன், செயலாளர் செய்யது பாரூக் ஆலீம், உதவித்தலைவர் செய்யது சிராஜூதீன், தர்கா ஹக்தார் நிர்வாக உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.