காரைக்கால் : காரைக்கால் நித்ய கல்யாணப்பெருமாள் கோவிலில், வஜ்ரங்கி சேவையில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்யகல்யாணப்பெருமாள் கோவிலில் நேற்று வஜ்ரங்கி சேவையை முன்னிட்டு, அதிகாலையில் மூலவர் ரெங்கநாதர் மற்றும் உற்சவ பெருமாளுக்கு மஞ்சள், திரவியப்பொடி, பன்னீர், பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பகல் 12:௦௦ மணிக்கு உச்சிகால தீபாராதனை நடந்தது. அப்போது, மூலவர் ரெங்கநாத பெருமாள், வஜ்ரங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.