திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் கோயில்களில் ஆடிப் பவுர்ணமி பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தன. சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் முடிந்து, சர்வ அலங்காரத்தில் ரங்கரத உலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தனர்.சண்முகர் சன்னதியில் எழுந்தருளியுள்ள ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.காவல் தெய்வமான கருப்பண சுவாமிக்கு காலையில் பல்வகை திரவிய அபிஷேகங்கள், படையல்கள் முடிந்து இரவு சந்தனக்காப்பு சாத்துப்படியாகி அருள்பாலித்தார்.சன்னதி தெருவிலுள்ள சொக்கநாதர் கோயில், மலைமேலுள்ள காசி விஸ்வநாதர் கோயில், மலைக்குப்பின்புறம் உள்ள பால்சுனை கண்ட சிவபெருமானுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன.