பதிவு செய்த நாள்
11
ஆக
2014
02:08
ஓமலூர்: ஓமலூர் அருகே, பச்சனம்பட்டி செங்காளியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள், தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.ஓமலூர் அருகே, பச்சனம்பட்டியில் செங்காளியம்மன் கோவில் திருவிழா, ஆண்டுதோறும், ஆடி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டும், கோவில் திருவிழா ஆடி மாதத்தில் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று காலை அம்மனுக்கு பக்தர்கள் பொங்கலிட்டு, ஆடு, கோழிகளை பலியிட்டு செங்காளியம்மனை வழிபட்டனர். மாலை 6 மணியளவில், பூக்களால், அலங்கரிக்கப்பட்ட தேரில், செங்காளியம்மன் சிலை வைக்கப்பட்டு, வாண வெடிகள் மற்றும் மேளதாளம் முழங்க ஏராளமான பக்தர்கள் தேரினை வடம்பிடித்து இழுத்தனர்.ஓமலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு, ஸ்வாமி தரிசனம் செய்தனர்.