பதிவு செய்த நாள்
11
ஆக
2014
02:08
கெங்கவல்லி :கெங்கவல்லி அருகே, மழை வேண்டி பெண்கள் பால் குடம் சுமந்து வந்து, மாரியம்மன் ஸ்வாமிக்கு பால் அபிஷேகம் செய்தனர்.கெங்கவல்லி அருகே கடம்பூரில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள மாரியம்மன் ஸ்வாமிக்கு, பால் அபிஷேகம் செய்து வழிபட்டால், மழை பெய்யும் என்பதை ஐதீகமாக கொண்டுள்ளனர்.இதன்படி, நேற்று மழை வேண்டி பெண்கள், மாரியம்மன் ஸ்வாமிக்கு, பால் குடம் சுமந்து ஊர்வலமாக வந்தனர். கோவில் வளாகத்தில், துவங்கிய ஊர்வலம் முக்கிய வீதி வழியாக வந்து, கோவிலை வந்தடைந்தது.பின்னர், பொங்கல் படையல் செய்து, மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.