அங்காளபரமேஸ்வரி கோவிலுக்கு புதிய அறங்காவலர் குழு நியமனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2014 12:08
புதுச்சேரி: சின்ன சுப்ராயப்பிள்ளை வீதி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு, அறங்காவலர் குழு அமைத்தற்கான ஆணையை, முதல்வர் ரங்கசாமி, நிர்வாகிகளிடம் வழங்கினார். புதுச்சேரி சின்னசுப்ராயப்பிள்ளை வீதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில். அற ங்காவலர் குழுவால் நிர்வகிக்கப்பட்டு, வருகிறது. இந்த அறங்காவலர் குழுவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய அறங்காவலர் குழு அமைக்கப்பட்டுள்ளது. புதிய அறங்காவலர் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற எஸ்.பி., விஜயக்குமார் தலைவராகவும், ரமேஷ் துணைத்தலைவராகவும், சிவசுப்ரமணியன் செயலாளராகவும், நாகசீனுவாசன் பொருளாளராகவும், முத்துலிங்கம் உறுப்பினராகவும் நியமிக்கப் பட்டுள்ளனர். இதற்கான ஆணையை, அதன் நிர்வாகிகளிடம் முதல்வர் ரங்கசாமி நேற்று வழங்கினார்.