பதிவு செய்த நாள்
12
ஆக
2014
12:08
ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி எட்டுப்பட்டி பெரிய மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கோவில் தர்மகர்த்தா ரகுராஜ் தலைமையில் நடந்து வருகிறது. இன்று இரவு, சத்தாபரண நிகழ்ச்சியும், வியாபாரிகள் சங்கம் சார்பில், வாண வேடிக்கையுடன், குறவன் குறத்தி நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. நாளை, தீமிதி விழாவும், அக்னி கரகம் எடுத்து வருதலும், மதியம், 2 மணிக்கு, அம்மன் திருத்தேர் ஊர்வலமும் நடக்கிறது. 14ம் ஆண்டாக, டி.வி.திருமலை நினைவாக பிரசாதம் வழங்கப்படுகிறது. வரும், 14ம் தேதி, அதிகாலை முதல் ஆடு, கோழி பலியிட்டு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், மாலை, 5 மணிக்கு, கம்பம் வழி அனுப்பும் விழாவும் நடக்கிறது. 15ம் தேதி, வண்டி வேடிக்கை, அலகு குத்துதல், பூந்தேர், உடற்கூறு நிகழ்ச்சியும், 16ம் தேதி, மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.