பதிவு செய்த நாள்
12
ஆக
2014
12:08
மேட்டுப்பாளையம் : சிறுமுகை அருகே நுாற்றாண்டு பழமை வாய்ந்த, நாகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. சிறுமுகை அருகே உள்ள முடுதுறை கிராமம் பெரியகுமாரபாளையம் பிரிவில், நாவுக்கரசி உடனமர் நாகநாதர் கோவில் உள்ளது. இங்கு திருப்பணிகள் துவங்கி, புதிதாக விநாயகர் கோவில், முருகர், நாகநாதர், நாவுக்கரசியம்மை, பைரவர் தெய்வங்களுக்கு கருவறை, விமானம், அர்த்த மண்டபம், முன்மண்டபம், சிறப்பான வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.நந்தி மண்டபம், சண்டேசர் திருக்கோவிலும், நுழைவு வாயிலும், திருவழுது மண்டபமும் கட்டப்பட்டுள்ளன. இதன் திருக்குட நன்னீராட்டு பெருவிழா, 7ம் தேதி பிள்ளையார் வழிபாட்டுடன் துவங்கியது. பேரூராதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் தலைமையில், சிரவையாதினம் குமரகுருபர அடிகள், பழனி ஆதினம் சாதுசண்முக அடிகள் ஆகியோர் புனித நீர் ஊற்றி திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை நடத்தினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நாகநாதர் அருட்பணி மன்றத்தார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.