பதிவு செய்த நாள்
13
ஆக
2014
09:08
சின்னமனூர் : குச்சனூர் சனீஸ்வரர் கோவிலில், சோணை கருப்பண்ணசாமி சுவாமிக்கு, 16 ஆடுகளை வெட்டி, 4000 மது பாட்டில்களை படைத்து, பக்தர்கள் வழிபாடு நடத்தினர். தேனி, குச்சனூரில் சுயம்பு சனீஸ்வரர் கோவிலில், ஆடி வாரவிழா நடந்து வருகிறது. இங்கு சோணை கருப்பண்ணசாமி, நாகர், லாடச் சித்தர் ஆகிய தெய்வங்களின் சன்னிதிகள் உள்ளன. ஆடி விழாவில் ஒவ்வொரு சனிவாரமும், சனீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. சோணை கருப்பண்ணசாமியிடம் வேண்டுவது பலிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதற்காக, பக்தர்கள் வேண்டுதலை முன் வைத்து வழிபட்டு செல்வர். அடுத்த ஆண்டோ அல்லது வேண்டுதல் நிறைவேறும் போதோ பக்தர்கள், நேர்த்திக்கடன் செலுத்துவர். சுவாமிக்கு ஆடுகளை வெட்டி, மது பாட்டில்களை படைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுவர். நேற்று முன்தினம் இரவில் நடந்த விழாவில், 4,000 மது பாட்டில்கள் சோணை கருப்பண்ணசாமி சுவாமிக்கு படைத்தனர். 16 ஆடுகள், 17 சேவல்கள், நூற்றுக்கணக்கான கோழிகள் வெட்டப்பட்டு, சுவாமிக்கு படைக்கப்பட்டன. பின், நள்ளிரவில் சிறப்பு பூஜை நடத்தி, 2,000 பக்தர்களுக்கு விருந்து கொடுத்தனர்.
தொடர்புடைய கோயில்கள் :