மேலுார் : மேலுார் நாகம்மாள் கோயிலின் 50வது ஆண்டு திருவிழா நேற்று துவங்கியது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்தனர். கோயிலில் பெரிய டிரம்களில் பால் ஊற்றப்பட்டு, மின் மோட்டார் மூலம் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைதொடர்ந்து பக்தர்கள் வேல் மற்றும் பறவை காவடி எடுத்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான முளைப்பாரி ஊர்வலம் இன்று நடக்கிறது.