பதிவு செய்த நாள்
14
ஆக
2014
12:08
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பொய்கை ஆழ்வார் குளம் அருகே, தபசு மரம் நடுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், உடைந்த நிலையில், கல் துாண் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சின்ன காஞ்சிபுரம் ஐதர்பேட்டை தெருவில் உள்ள, ராஜராஜேஸ்வரி ஆகாய கன்னியம்மன் கோவிலில், 34ம் ஆண்டு ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவை முன்னிட்டு, இன்று அதிகாலை தபசு மரம் ஏறும் விழா நடைபெறும் என, அறிவிக்கப்பட்டி ருந்தது. இதனால், அருகில் உள்ள பொய்கை ஆழ்வார் குளம் அருகே, தபசு மரம் நடுவதற்கு நேற்று காலை 8:00 மணிக்கு பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, நான்கடி ஆழத்தில், பாறை போன்ற கல் இருப்பதாக தென்பட்டது. இதையடுத்து, அங்கு நன்றாக தோண்டியபோது, மூன்றரை அடியில் உடைந்த நிலையில், கல் துாண் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த துாணில் உள்ள நான்கு பக்கத்தில், இரண்டு பக்கத்தில் ஆஞ்சநேயர் உருவமும், மற்ற இரு பக்கங்களில், வாமனன் மற்றும் பெருமாள் உருவமும் இடம்பெற்றுள்ளது. அப்போது அங்கு திரண்டிருந்த அப்பகுதிவாசிகள், து ாணுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு வழிபட ஆரம்பித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த் துறையில், அப்பகுதிக்கு சென்று பகுதிவாசி களிடமிருந்து துாணை கைப்பற்றி, தாலுகா அலுவலகம் கொண்டு சென்றனர். இதுகுறித்து காஞ்சிபுரம் வருவாய் ஆய்வாளர் செல்வராஜ் கூறுகையில், “பொய்கை ஆழ்வார் குளம் அருகே கண்டெடுக்கப்பட்ட கல் துாணை கைப்பற்றி தாலுகா அலுவலகம் கொண்டு வந்துள்ளோம். தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்து, அவர்களிடம் ஒப்படைக்கப்படும்,” என்றார்.