பதிவு செய்த நாள்
14
ஆக
2014
12:08
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித்திருவிழா ஆக., 16 ல் கொடியேற்றத்துடன் துவக்கம். தேரோட்டம் ஆக., 25 ம் தேதி நடக்கிறது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணித்திருவிழா ஆக., 16ம் தேதி காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 12 நாள் நடக்கும் இந்த திருவிழாவில், ஆக.,20 ல் 5ம் நாள் திருவிழாவில், குடவருவாயில் தீபாரதணை காலையில் நடக்கிறது. ஆக., 22 ல்,7ம் நாள் திருவிழாவில் காலை சண்முகருக்கு உருகுசட்ட சேவை நடக்கிறது. மாலை 4.30க்கு சண்முகர் தங்க சப்பரத்தில்,சிவப்பு சாத்தி கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஆக., 23 எட்டாம் நாள் திருவிழாவில் காலை 5 க்கு சண்முகர் வெள்ளி சப்பரத்தில், வெள்ளை சாத்தி கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஆக., 25, 10 ம் நாள் திருவிழாவில் குமரவிடங்க பெருமான் வள்ளி, தெய்வாணையுடன் காலை 6 மணிக்கு எழுந்தருளுவார். பின் தேரோட்டம் நடக்கும். இதில் விநாயகர் தேர் முதலிலும், சுவாமி தேர் இரண்டாவதாகவும், அம்மன் தேர் மூன்றாவதாக நகர் வீதிகளில் வலம் வரும். பக்தர்கள் திரண்டு நின்று முருகப்பெருமானை தரிசனம் செய்வார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை கமிஷனர் ஞானசேகரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
தொடர்புடைய கோயில்கள் :