நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் நேற்று கோகுலாஷ்டமியை முன்னிட்டு உறியடி திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று காலை 11;00 மணிக்கு உற்சவர் கண்ணன் மற்றும் திரவுபதியம்மன் ,விநாயகர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந் தது. மாலை 4:15 மணிக்கு உற்சவர் கண்ணன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக புறப்பட்டு சென்று உறியடி திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.