பதிவு செய்த நாள்
18
ஆக
2014
12:08
பழநி: பழநி வேணுகோபாலபெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பெருமாளுக்கு, பால், பழங்கள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. சிறப்பு அர்ச்சனை, செய்யப்பட்டது. கோயில் சார்பாக கிருஷ்ணர் அவதார அலங்காரமும், உற்சவப்பெருமாளுக்கு சிறப்பு அலங்காரமும் செய்திருந்தனர். ஏராளமான சிறுவர்,சிறுமிகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு, திருக்கோயிலை வலம் வந்து, கோலாட்டம், கும்மியடித்து, வேணுகோபாலபெருமாளை வழிபாடு செய்தனர்.