தாண்டிக்குடி : தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. கால பைரவருக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனையும் வடை மாலை சாத்தப்பட்டது. தேங்காய், நெய் விளக்கு தீபங்கள் ஏற்றப்பட்டன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கொடைக்கானல் டி.எஸ்.பி., மோகன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை அறக்கட்டனை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.