பதிவு செய்த நாள்
18
ஆக
2014
01:08
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அத்தியூர் திருக்கை பிடாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. விழாவையொட்டி கடந்த 8ம் தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பத்து நாள் நடந்த விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவில் பிடாரியம்மன், விநாயகர், முருகன், மாரியம்மன், ஆத்திலியம்மன், அய்யனாரப்பன் சுவாமிகள் வீதியுலா நடந்தது. நேற்று தேர் திருவிழாவையொட்டி, மாரியம்மனுக்கு சாகை வார்த்தல், ஆத்திலியம்மன் பிரவேசமாகி ஆரோகணிதல், பிடாரியம்மன், அய்யனாரப்பனுக்கு ஏரிக்கரை சன்னதியி ல் திருக்கல்யாணம் நடந்தது. பின்னர், அலங்கரிக்கப்பட்ட தேரில் பிடாரியம்மன் எழுந்தருளியபின், நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் செந்திலதிபன், விழாக்குழு தலைவர் பொன்னுசாமி மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.