முருக்கேரி: சிறுவாடி கிராமத்தில் உள்ள சாமி நகரில் வினாயகர், முத்துமாரிம்மன், பாலமுருகன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி கடந்த 14ம் தேதி மாலை விக்னேசுவர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பஞ்சபாலிகை பூஜை, காப்புகட்டுதல், கும்ப அலங்காரத்துடன் முதற்கால யாக பூஜைகள் நடந்தது. மறுநாள் காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால பூஜைகளாக கோ பூஜை, அஷ்ட திவ்ய ஹோமம், விசேஷ மூலிகை ஹோமங்கள், மஹாபூர்ணாஹுதி நடந்தது. தொடர்ந்து 9:00 மணிக்கு முருக்கேரி ஸ்ரீலஸ்ரீ சீனுவாசசாமி குழுவினர், ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர், மூலவருக்கு பிரதிஷ்ட்டை செய்யப்பட்டது.