பதிவு செய்த நாள்
18
ஆக
2014
01:08
காங்கேயம்: காங்கேயம், நத்தக்காடையூர் அருகே, பழையகோட்டை ஸ்ரீமூடுபாறை கருப்பணசாமி கோவிலில், ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக, பூஜை நடந்தது. மூடுபாறை கருப்பணசாமிக்கு, பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனத்துடன் சிறப்பு அபிஷேகம் செய்து, புதிய பட்டாடை உடுத்தி, சிறப்பு அலங்கார புஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.