பதிவு செய்த நாள்
19
ஆக
2014
12:08
பெரம்பலூர் :பெரம்பலூரில் மேல் மருவத்தூர் சுயம்பு ஆதிபராசக்தி சித்தர் வழிபாட்டு மன்றம் சார்பில், கஞ்சிக்கலய ஊர்வலம் நடந்தது.பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள மன்றத்தின், 34ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் ஆடிப்பூர விழா, 15ம் தேதி காலை குருபூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, கலசவிளக்கு வேள்வி பூஜையும், 16ம் காலை அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது.மாலையில், பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்ட் அருகிலிருந்து கஞ்சிக்கலய ஊர்வலம் தொடங்கியது. பாலக்கரை, கடைவீதி, கனரா வங்கி, பழைய பேருந்து நிலையம், சங்குப்பேட்டை வழியாக சென்று புதிய மதனகோபால புரத்தில் அமைந்துள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தை அடைந்தது.இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் சிகப்பு உடையணிந்து, கஞ்சிக்கலயத்துடன் ஊர்வலமாக சென்றனர். பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.