ஓமலூர் :கருப்பூரில் உள்ள, பத்ரகாளியம்மன் கோவிலில், வரலட்சுமி விரதத்தினை முன்னிட்டு, திருவிளக்கு மாங்கல்ய பூஜை நடந்ததுஅம்மனுக்கு, வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. மழை வளம் வேண்டியும், நாட்டு மக்கள் வளம்பெறவும், 108 விளக்குகள் வைத்து, திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர்.இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு வைத்து பூஜை செய்தனர். அதைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.