கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
நெட்டப்பாக்கம்: மடுகரை குருநகர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் கோகுலாஷ்டமி திருநட்சத்திர வைபவம் நடந்தது. லட்சுமி நாராயண பெருமாளுக்கு தைலக்காப்பிட்டு, மஞ்சள், சந்தனம், கரும்பு, தேன், பன்னீர், அபிஷேகப் பொடி, பஞ்சாமிர்தம் கொண்டு திருமஞ்சனம் நடந்தது. பெருமானுக்கு பெரியாழ்வார் திருமொழி, பாசுரம் திருப்பாவை சேவிக்கப்பட்டது. பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் மற்றும் வெண்ணெய் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நித்தியகல்யாணி, ரோகினி, ஜெயக்குமார், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.