பதிவு செய்த நாள்
21
ஆக
2014
01:08
திருத்தணி : உலக நன்மை மற்றும் மழை வேண்டி, அனுமந்தா கோவிலில், நேற்று, சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்தன.திருத்தணி அடுத்த, ஆற்காடு குப்பம் பகுதியில், கொற்றலை ஆற்றின் கரையோரம் அனுமந்தா கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று உலக நன்மைக்காவும், மழை வேண்டியும் சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன.இதையொட்டி, கோவில் வளாகத்தில், மூன்று யாகசாலை மற்றும் 108 கலசங்கள் வைத்து, காலை, 10:30 மணிக்கு, கணபதி ஹோமம், கோ பூஜை மற்றும் சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.இந்த நிகழ்ச்சியில், ஆற்காடுகுப்பம், லட்சுமாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.